அதிக நாள் உயிர் வாழ ஆசையா... இதை சாப்பிட்டு வாங்க! - CBSE INFO

Thursday, 18 November 2021

அதிக நாள் உயிர் வாழ ஆசையா... இதை சாப்பிட்டு வாங்க!

 

பூண்டு உலகின் கிட்டத்தட்ட எல்லா வீட்டு சமையல் அறைகளிலும் இருக்கும் பொருள். உணவுக்கு சுவை மட்டுமின்றி உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரக் கூடியது பூண்டு.

மற்ற காய்கறிகளைப் போல இதில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், தாமிரம், வைட்டமின்கள் ஏ, பி, சி உள்ளிட்ட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன.

தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் கிடைக்கக் கூடிய பலன்களைப் பற்றிப் பார்ப்போம்...

பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். நோய்க் கிருமிகள், பூஞ்சை தொற்றுகளை அழிக்கும் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். சாதாரண சளி, காய்ச்சல், காதுகளில் ஏற்படும் தொற்று என பல பிரச்னைகளைத் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.

பூண்டு இதய நோய்களுக்கான வாய்ப்பைக் குறைத்து இதயத்தை பாதுகாக்கும். ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவைக் குறைப்பதுடன், ரத்த நாளங்களில் படிந்த கொழுப்பையும் கரைக்கும். எச்.டி.எல் என்ற நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்து எல்.டி.எல் அளவைக் குறைக்கிறது.

பூண்டு உடல் முழுக்க சீரான ரத்த ஓட்டம் நடைபெறுவதற்கு துணை செய்கிறது. பூண்டின் ரத்தம் கட்டியாவதைத் தடுக்கும் பண்புகள் ரத்த ஓட்டம் சீராக நடைபெறத் தூண்டுகிறது. ரத்தத்தை அதிகம் நீர்த்து போகச் செய்து உடல் முழுக்க எளிதான ரத்த ஓட்டம் நடைபெற செய்கிறது. ரத்தம் உறைதல் பிரச்னையைத் தடுக்கிறது.

பூண்டு உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட பிரச்னையையும் இது சரி செய்கிறது. கல்லீரல் செயல்திறனை மேம்படுத்துகிறது. கல்லீரல், பித்தப்பை, சிறுநீர்ப்பை, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பூண்டில் அதிக அளவில் கந்தம் உள்ளது. இது உடலில் உள்ள உறுப்புகள் கடினமான உலோக நச்சுக்களால் பாதிப்படைவதைத் தடுக்கிறது. குறிப்பாக உலோக தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு தினமும் பூண்டு அளித்து சோதனை செய்யப்பட்டது. இதில் நச்சுக்கள் அளவை 19 சதவிகிதம் அளவுக்கு பூண்டு குறைத்திருந்தது கண்டறியப்பட்டது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வது, இதயம், கல்லீரல் உள்ளிட்ட உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, கொலஸ்டிரால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது என மொத்தத்தில் பூண்டு மனிதனின் வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும் பொக்கிஷமாகப் பூண்டு விளங்குகிறது.

No comments:

Post a Comment